செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By

மிதுனம்: தை மாத ராசி பலன்கள் 2020

(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்) - கிரகநிலை: ராசியில்  ராஹூ -  தைரிய  ஸ்தானத்தில் சந்திரன் - ரண, ருண ஸ்தானத்தில் செவ்வாய் -  களத்திர ஸ்தானத்தில் குரு, சனி, கேது - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பாக்கிய  ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றங்கள்:
 
28-01-2020 அன்று மாலை 3.12 மணிக்கு புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
04-02-2020 அன்று மாலை 6.36 மணிக்கு சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
10-02-2020 அன்று காலை 5.13 மணிக்கு  செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
 
விவேகத்துடன் நடந்து கொள்ள ஆசைப்படும் மிதுன ராசியினரே, இந்த மாதம் உங்களின் பணதேவை பூர்த்தியாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் எதிலும் மாட்டிக்கொள்ளாமல் இருப்பது நல்லது. பயணங்கள் மூலம் சில முக்கிய நபர்களைச் சந்திக்க வேண்டி இருக்கும்.  திடீர்  மன குழப்பம் ஏற்படும். முக்கிய முடிவு எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். 
 
குடும்பத்தில் இருப்பவர்களுடன் சிலருக்கு கருத்து வேற்றுமைகள் உண்டாகலாம். எனவே தேவையில்லாமல் வார்த்தைகளை விட வேண்டாம். நெருக்கடியான  நேரத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் கவனம்  தேவை. 
 
தொழில் வியாபாரத்தில் மெத்தனப் போக்கு காணப்பட்டாலும் பணவரத்து சுமாராக இருக்கும். சரக்குகளை கவனமாக கையாள்வது நல்லது. 
 
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி புதிய பொறுப்புகள் ஏற்படலாம். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து  அவர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள்.
 
கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற வேலைகள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு கிடைக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். 
 
அரசியல் துறையினருக்கு பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள  வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். 
பெண்களுக்கு  தடைபட்ட காரியங்கள் நடந்து முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து குறையலாம். 
 
மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். ஆசிரியர்கள் பாராட்டு வார்கள். சக மாணவர் மத்தியில் மதிப்பு கூடும்.
 
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
 
இந்த மாதம் எதிர்ப்புகள்  விலகும். தொல்லைகள் தீரும். வீண்கவலைகள்  ஏற்பட்டு நீங்கும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. பணவரத்து  தாமதப்படும். வீண் ஆசைகள் உண்டாகலாம் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் வேகம் குறைந்தாலும் திருப்திகரமாக நடக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும்.  பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது  நல்லது. மகிழ்ச்சி உண்டாகும்.
 
திருவாதிரை:
 
இந்த மாதம் உறவினர், நண்பர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும். எதிர்பார்த்த ஆர்டர்கள், சரக்குகள்  வருவதிலும்  தாமதம் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு  செயல்படுவதை  தவிர்ப்பது நல்லது.  மேல்  அதிகாரிகள் மூலம் நன்மை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். வியாபாரம் தொடர்பான  பிரச்சனைகளை கையாளும் போது கவனம் தேவை.
 
புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
 
இந்த மாதம் குடும்பத்தில் இருந்த  பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த கருத்து  வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனமும், அனுசரணையும் இருப்பது நல்லது. கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. பெண்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். வாகனங்கள் மூலம் லாபம் கிடைக்கும். சரக்குகளை வெளியூர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.  
 
பரிகாரம்: பெருமாளை வணங்க முன் ஜென்ம பாவம் நீங்கும். குடும்பம் சுபிட்சமடையும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: ஜனவரி 18, 19.